கோப்புப் படம் 
இந்தியா

ஆதார் எண் முடக்கப்பட்டாலும் வாக்களிக்க முடியும்!

முடக்கப்பட்ட ஆதார் எண்கள் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் உறுதி.

DIN

செயலிழக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாரும் தடுக்க முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழுவின் குற்றச்சாட்டுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழு, தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஆதார் அட்டைகள் இல்லாதபோது, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

செயலிழக்கப்பட்ட அல்லது முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாரும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், முடக்கப்பட்ட ஆதார் எண்கள் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவிடம் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகல் கனவு சிறப்பு... சுஷ்மிதா ஷெட்டி!

தீபாவளி ஸ்பெஷல்... ஸ்ரீஜா ராஜ்கோபால்!

உலகக் கோப்பைக்காக 4 ஆண்டுகள் காத்திருப்பு... மழையினால் கொந்தளித்த நியூசி. கேப்டன்!

எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது: ஆர்.பி.உதயகுமார்

வரன் தேடுபவரா? மேட்ரிமோனி தளத்திலும் மோசடி நடக்கலாம்! எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT