கோப்புப்படம். 
இந்தியா

மத்திய சிறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்!

ஜம்முவில் உள்ள மத்திய சிறையின் வளாகத்திற்குள் செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

DIN

ஜம்முவில் உள்ள பலத்த பாதுகாப்பைக் கொண்ட மத்திய சிறையில் செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பாலிதீன் பைக்குள் சிம்கார்ட் இல்லாத செல்போன், ஒரு ஹெட்போன் மற்றும் ஒரு அடாப்டர் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளைக் கொண்டுள்ள சிறைப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரால் அந்த பாலிதீன் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தடவியல் நிபுனர்களின் உதவியோடு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன் கைதிகளின் பயன்பாட்டில் இருந்ததா அல்லது வெளியிலிருந்து சிறைக்குள் தூக்கியெறியப்பட்டதா என விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT