முகப்பு
இந்தியா

ரூ.10.15 கோடி திரட்டிய காங்கிரஸின் 'நாட்டுக்காக நன்கொடை' பிரசாரம்!

காங்கிரஸின் 'நாட்டுக்காக நன்கொடை' பிரசாரம் ரூ.10.15 கோடி திரட்டியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
காங்கிரஸ் பிரசாரத்தை துவங்கியபோது எடுத்த புகைப்படம்.
பகிர்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடந்த மாதம் துவங்கி வைத்த நாட்டுக்காக நன்கொடை எனும் மக்களிடம் நன்கொடை திரட்டும் பிரசாரத்தின் மூலம் இதுவரை 10.15 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக தொகை வசூல் செய்யப்பட்ட மாநிலமாக தெலுங்கானாவும் அதைத் தொடர்ந்து ஹரியானா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பொருளாளரான அஜய் மக்கான் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானாவில் ரூ.1.72 கோடியும், ஹரியானாவில் ரூ.1.21 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக தொகை வசூல் செய்யப்பட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் தெலுங்கானா, ஹரியானா, மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெறுகின்றன.  

இதையும் படிக்க: உண்மை காக்கப்பட்டது: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதானி கருத்து!
 
காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதன் அடிப்படையில் மக்கள் 138-ன் மடங்குகளில் நன்கொடையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதாவது 138, 1380, 13800 என்ற மடங்குகளாக கொடை பெறப்பட்டது. 

கட்சியை வலுப்படுத்தி வளம் மிகு இந்தியாவையும் சமமான வளங்கள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து கார்கே பேசியதாவது, 'காங்கிரஸ் மக்களிடம் நன்கொடை கேட்பது இதுவே முதல்முறை. பணக்காரர்களை சார்ந்து வேலை செய்தால், அவர்களின் கொள்கைகளும் நம்மீது திணிக்கப்படும். சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி கூட மக்களிடம் நன்கொடை பெற்றிருக்கிறார்.' எனக் கூறியுள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →