மோடி பகிர்ந்த லட்சத்தீவு புகைப்படம் | X 
இந்தியா

லட்சத்தீவில் மோடி, மாலத்தீவு அமைச்சரின் சர்ச்சை பதிவு!

பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றது தொடர்பாக மாலத்தீவு அமைச்சர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர் எக்ஸ் தளத்தில் செய்த பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கும் நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காகவும் லட்சத்தீவு சென்றிருந்தார். அங்கு சென்று புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தது சுற்றுலாத்துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக 'லட்சத்தீவு' இரண்டு நாள்களுக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மாலத்தீவு அமைச்சர், இந்தியா மாலத்தீவைக் குறிவைத்துள்ளது, கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என அவர் கூறியுள்ளார். 

லட்சத்தீவில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு பல புகைப்படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதிவினை மாலத்தீவு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.  

மாலத்தீவின் புதிய பிரதமராக முகமது மூயிஸ் கடந்த நவம்பரில் பதவியேற்ற பிறகு, இந்தியா - மாலத்தீவு உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது மூயிஸ் தனது பதிவியேற்றபோது மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT