இந்தியா

நாளை லண்டன் செல்கிறார் ராஜ்நாத் சிங்! 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை திங்கள்கிழமை(ஜன.8) லண்டன் செல்கிறார்.

DIN

புதுதில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை திங்கள்கிழமை(ஜன.8) லண்டன் செல்கிறார். அவருடன்  டிஆர்டிஓ,பாதுகாப்புத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சகக் குழுவும் செல்கிறது.

ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் போது, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார். பாதுகாப்பு பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ராஜ்நாத் சிங் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு,காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் கேமரூனை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிரிட்டன் பாதுகாப்புத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் உரையாடுவார் மற்றும் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் அவா் உரையாடுகிறாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தனது பிரிட்டன் பயணத்தின்போது அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். தலைநகா் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரது நினைவு இல்லங்களை ராஜ்நாத் சிங் பாா்வையிடுகிறாா். தொடா்ந்து, பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் அவா் உரையாடுகிறாா்.

கடந்த 2002, ஜன.22-இல் அப்போதைய பாஜக அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் பிரிட்டனுக்குப் பயணத்துக்கு பின்னர், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய பாஜக அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரிட்டன் செல்வது முக்கியத்துவம்  வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT