கோப்புப்படம் 
இந்தியா

ஐந்து மாநிலங்களில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி தயார்!

பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மேலும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க இவ்விரு கட்சிகளிடையே திங்கள்கிழமை ஆலோசனைகள் நடைபெற்றன. 

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய், “இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சமீபத்தில் தொடங்கியுள்ளது.

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இப்போது வரை, நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிடும். அடுத்த கூட்டத்தில், தொகுதிகள்  குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

போட்டியிடும் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கோபால் ராய், தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடக்கம்!

பஞ்சாபில் வெள்ளம்: ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா பேச்சு

பஹல்காம் தாக்குதலுக்கு எஸ்சிஓ தலைவர்கள் கண்டன தீர்மானம்! பாகிஸ்தான் பிரதமரும்...

பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT