பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காவலர் உள்பட 4 பேர் பலி!
பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள லாச்சி சுங்கச்சாவடியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இன்று காலை தாக்குதல் நடத்தியபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் 3 காவலர் உள்பட 4 பேர் பலியாகினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு விரைந்தது.
இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதி முழுவதும் சீல் வைத்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கைபர் பக்துன்க்வாவில் கடந்த ஆண்டு பயங்கரவாதிகளின் கொடிய ஊடுருவல்களால் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஜனவரியில், வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் காவலர் வேடமணிந்த தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 101 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலும் காவல் அதிகாரிகள் ஆவார்.