இந்தியா

‘ஜன. 31 முதல் பிப்.9 வரை பட்ஜெட் கூட்டத்தொடா்’

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும்

DIN

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் பக்கத்தில், ‘17-ஆவது நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் குடியரசுத் தலைவரின் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரையில் நடைபெறும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

நிகழாண்டு மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். 17-ஆவது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16-ஆம் தேதி முடிவடைவதால், நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத்தொடராக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT