இந்தியா

பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை!

DIN

பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மோப்ப நாய்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பூஞ்ச் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கிருஷ்ண காடி பூஞ்ச் பிரிவுக்கு அருகில் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.” என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக, வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜம்மு பிரிவில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

SCROLL FOR NEXT