தில்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழில் பொங்கல் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இவ்விழாவில் பங்கேற்க பிரதமர், பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார்.
அவர், பொங்கல் வாழ்த்துகளை வாழ்த்துகளை தமிழில் தெரிவித்ததோடு, ‘தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்ற திருக்குறளை மேற்கொள்காட்டிப் பேசினார்.
இதையும் படிக்க: திசை திருப்பப்படும் 9 விமானங்கள்
இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரனி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.