சர்க்கரை ஆலை விபத்து
உத்தர பிரதேச முதல்வர் சர்க்கரை ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாசர்க்கரை ஆலை விபத்து
உத்தர பிரதேச முதல்வர் சர்க்கரை ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் சீதாபூரில் சர்க்கரை ஆலை நீராவி தொட்டி வெடித்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜவஹர்பூர் சர்க்கரை ஆலையில் திங்கள்கிழமை வேலை நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்தப் பகுதி காவலர்கள் தெரிவித்தனர்.
காயமுற்றவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சீதாபூர் மாவட்ட அதிகாரிகளைத் துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: மகனைக் கொன்ற வழக்கு: சுசனாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத்.