உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்) 
இந்தியா

சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது உத்தவ் தாக்கரே அணி!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகரின் முடிவை எதிர்த்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் சென்றது உத்தவ் தாக்கரே அணி.

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நார்வேகரின் முடிவை எதிர்த்து திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் சென்றது உத்தவ் தாக்கரே அணி.

சிவசேனையில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய உத்தவ் தாக்கரே அணியின் கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் ஜனவரி 10ஆம் தேதி நிராகரித்தார். மேலும் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவரின் இந்த முடிவை எதிர்த்து சிவசேனை உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி இன்று (ஜன.15) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விலகி தனி அணி அமைத்தனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவின் மீது ஜன.10ம் தேதி தீர்ப்பளித்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனை என்று அறிவித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தீர்ப்பளிப்பதற்கு முன்பு ஜன.7ம் தேதி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்திற்கு சென்றுவந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT