முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனாவுக்கு மூவர் பலி!

இந்தியாவில் கரோனா தொற்று பாதித்து கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலியாகியுள்ளனர். 

Updated On : 16 ஜனவரி, 2024 at 12:28 PM
பகிர்:

இந்தியாவில் கரோனா தொற்று பாதித்து கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலியாகியுள்ளனர். 

கரோனா குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினசரி தரவுகள் வெளியிட்டு வருகின்றது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 180 பேர் பதிவாகியுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2,804-ஆக உயா்ந்துள்ளது.

புதிய வகை கரோனா பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகின்றது. 

நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.