கோப்புப்படம். 
இந்தியா

பேருந்து நிலையத்தில் தூங்கிய தாய், கடத்தப்பட்ட குழந்தை!

ஒடிசா மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயிடமிருந்து 9 மாதக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

DIN

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடமிருந்து 9 மாதக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவனுடன் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண், இரண்டு நாள்களாக பேருந்து நிலையத்தில் தங்கி வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பேருந்து நிலையத்தில் தூங்கியெழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கவனித்த தாய், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தையைக் கடத்திய 45 வயது பெண்ணைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போன குழந்தை அந்த பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர்களுக்கு அப்பால், புவனேஸ்வரில் கண்டுபிடிக்கப்பட்டது. 

சிசிடிவி காணொலிகள் மூலம் குற்றவாளியைக் கண்டுபிடித்ததாகவும், குற்றவாளியின் சகோதரி வீட்டில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT