இந்தியா

ஹேமந்த் சோரனிடம் விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை!

DIN

அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணையை துவக்கினர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் சனிக்கிழமை விசாரணையைத் துவக்கினர்.

இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை முதலே முதல்வரின் இல்லம் மற்றும் அமலாக்கத்துறையின் வட்டார அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

அம்மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் இதற்கு முன்னதாக அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை புறக்கணித்திருந்தார். 

இந்நிலையில் எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து அவர் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார். 

இதற்கிடையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அதே நேரம் எங்களது கட்சிக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்து எங்கள் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறக்கும் உயிர்! ஹன்சிகா..

சென்னைக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

அமைதிக்கான நேரம்! தன்வி ராம்..

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT