இந்தியா

உ.பி.: மொபைலில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் பலி

DIN

உத்திர பிரதேசத்தில் மொபைலில் கார்ட்டூன்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது 5 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்திர பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் காமினி என்ற 5 வயது சிறுமி தனது தாயின் அருகே படுத்திருந்தவாறே மொபைல் போனில் கார்ட்டூன்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி திடீரென மயக்கமடைந்தாள். உடனே அச்சிறுமி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 
இதுகுறித்து ஹசன்பூர் சமூக நல மைய பொறுப்பாளர் துருவேந்திர குமார் கூறுகையில், ‘‘மாரடைப்பால் சிறுமி இறந்திருக்கலாம் என்றார். அம்ரோஹா தலைமை மருத்துவ அதிகாரி சத்யபால் சிங் மேலும் கூறுகையில், சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சிறுமி மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார். 
கடந்த இரண்டு மாதங்களில் அம்ரோஹா மற்றும் பிஜ்னோர் மாவட்டங்களில் "மாரடைப்பு" காரணமாக இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மூத்த மருத்துவர் ராகுல் பிஷ்னோய் கூறுகையில், குளிர் காலநிலை காரணமாக மாரடைப்பு ஏற்படுவது பொதுவானதாக இருக்கலாம். ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்த அழுத்தம் பொதுவாக குறைந்து, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு

ஒலிம்பிக் அகாதெமிக்கு இடம் தோ்வு செய்யும் பணி

இளைஞா் குத்திக் கொலை பெண் உள்பட 4 போ் கைது

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT