அஸ்ஸாம்: கோயிலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!
அஸ்ஸாமில் படாதிரவாதான் கோயிலுக்குள் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு நிலவியது.
அஸ்ஸாமில் படாதிரவாதான் கோயிலுக்குள் செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு நிலவியது.
இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ என்ற பெயரில் மணிப்பூா் முதல் மகாராஷ்டிரம் வரை (கிழக்கில் இருந்து மேற்கு) இரண்டாம் கட்ட பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். தற்போது ராகுல் காந்தியின் நடைப்பயணம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஸ்ஸாம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று காலை செல்ல முயன்றார். அப்போது அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது படாதிரவாதான் கோயிலுக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.