இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் 2.5 லட்சம் பக்தர்கள் இன்று தரிசனம்!

அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரை இன்று 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

DIN

அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரை இன்று 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.

ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 8,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரை செவ்வாய்கிழமை சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், இதேபோன்ற எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதாகவும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர் ஒருவர் கூறுகையில், ஒடிஸாவிலிருந்து அயோத்தியில் உள்ள ராமரை தரிசனம் செய்வதற்காக  இருசக்கர வாகனத்தில் 1224 கி.மீ தொலைவு பயணித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT