இந்தியா

அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்!

அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான ஸ்ரீபால ராமரை காண அதிகளவில் மக்கள் குவிந்து வருவதால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயமடைந்துள்ளனர். 

DIN

அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான ஸ்ரீபால ராமரை காண அதிகளவில் மக்கள் குவிந்து வருவதால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயமடைந்துள்ளனர். 

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பக்தர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT