மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்) 
இந்தியா

ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் மனம் மாறமாட்டார்கள்: கார்கே

ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறுகிய லாபங்களுக்காக மனம் மாறமாட்டார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

DIN

ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறுகிய லாபங்களுக்காக மனம் மாறமாட்டார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு கூறினார். 

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, “நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

நான் நாளை (ஜன.28) டேராடூன் செல்கிறேன். அதன்பிறகு தில்லி செல்ல உள்ளேன். முதலில் அவர்களிடம் பேசி சரியான விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன். இல்லையெனில் குழப்பத்திற்கே வழிவகுக்கும். 

அனைவரையும் ஒன்றிணைக்கவே முயற்சித்து வருகிறோம், என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். லாலு பிரசாத் யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் பேசியுள்ளேன்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவிற்கு எதிராக சண்டையிட்டு நிச்சயம் வெல்லலாம். நாட்டின் ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் மனம் மாறாமல் இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படும் வேளையில், அதற்கு மாறாக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு சுமுகமாக நிறைவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

எம் & எம் விற்பனை 16% உயா்வு

SCROLL FOR NEXT