இந்தியா

கேரள ஆளுநருக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

DIN

மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இஸட் பிளஸ் (Z+) பாதுக்காப்பு வழங்கியுள்ளது. 

முகமது ஆரிப் கானுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இந்த இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளத்தாக ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

கேரள ஆளுநரின் வருகையின்போது இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உறுப்பினர்கள் கருப்புக்கொடி காட்டி அவரது வருகைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கருப்புக் கொடி காட்டியவர்களைக் கைது செய்யக்கோரி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.

இரண்டு மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர், 17 எஸ்எஃப்ஐ உறுப்பினர்கள் மீது வழக்கு பதியப்பட்டதற்கான ஆவணத்தின் நகலைப் பார்த்த பின்னரே அங்கிருந்து கிளம்பினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு இந்த இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

SCROLL FOR NEXT