முகப்பு
இந்தியா

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக முடிவு!

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க  பிகார் பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
பகிர்:

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க  பிகார் பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

நிதிஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று காலை பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், இக்கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் செளத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாட்னா புறப்பட்டுச் சென்றுள்ளார். 

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு 122-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →