மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்) 
இந்தியா

இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்: நிதீஷ் குமார் ராஜிநாமா குறித்து கார்கே!

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது குறித்து இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது குறித்து இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பிகார் ஆளுநரை சந்தித்த நிதீஷ் குமாா் முதல்வர் பதவியை  ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். முன்னாகவே எங்களுக்கும், அவருக்கும் இடையே கருத்து மோதல் உள்ளது. லாலு மற்றும் தேஜஸ்விடம் பேசிய போது, இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறப் போவதாக தெரிவித்தனர். அவர் கூட்டணியில் இருக்க விரும்பி இருந்தால், அவர் இருந்திருப்பார், ஆனால் அவர் வெளியேறா விரும்புகிறார்.

இது நமக்கு முன்பே தெரிந்ததுதான். இந்தத் தகவலை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் முன்பே எங்களுக்குத் தெரிவித்தனர். இன்று அது உண்மையாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்

நிதிஷ்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

GST வரிகள் குறைப்பு! TV, AC வாங்குபவர்கள் கவனத்திற்கு! | Nirmala Sitharaman | BJP

திருவோணம் வந்தல்லோ... மடோனா செபாஸ்டியன் !

சிவகார்த்திகேயனின் மதராஸி: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்: செப். 8 முதல் கனமழை!

SCROLL FOR NEXT