அமலாக்கத் துறை விசாரணைக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ் 
இந்தியா

தேஜஸ்வி யாதவிடம் 8 மணி நேரம் விசாரணை!

ரயில்வே பணிக்கு லஞ்சமாக குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

DIN

பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக நேற்று தேஜஸ்வி யாதவின் தந்தையும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் இன்று (ஜன. 30) தேஜஸ்வியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவிடம் நேற்று 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

விசாரணை நடத்தப்பட்ட பாட்னாவிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு தேஜஸ்வி யாதவின் ஆதரவாளர்கள் கூடி முழக்கங்களை எழுப்பினர். விசாரணை முடியும் வரை அவரின் தொண்டர்கள் அலுவலகம் வெளியே குவிந்திருந்தனர். 

அமலாக்கத் துறையின் 8 மணிநேர விசாரணைக்குப் பிறகு தேஜஸ்வி யாதவ் பாட்னா அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில குண்டு எறிதல் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு தங்கப் பதக்கம்

போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராக ஹக்ராம மொஹிலாரி பதவியேற்பு

உ.பி.: ‘சட்டவிரோத’ மசூதியை தாங்களே இடித்து அகற்றிய முஸ்லிம்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பம்: வலைதளம் உருவாக்க அரசு திட்டம்!

தலைத்துண்டித்து ஒருவா் படுகொலை

SCROLL FOR NEXT