இந்தியா

பிப். 2 முதல் மக்களவைத் தேர்தல் பிரசாரம்: காங்கிரஸ்

தெலங்கானாவில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவங்கவுள்ளது.

DIN

தெலங்கானாவில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவங்கவுள்ளது. இதனை தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் மது கெளட் யாஸ்கி இன்று (ஜன. 31) உறுதிப்படுத்தியுள்ளார். 

இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யாஸ்கி, மக்களவைத் தேர்தலையொட்டி பிப்ரவரி 2ஆம் தேதிமுதல் காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தைத் தொடங்குகிறது. அடிலாபாத் மாவட்டத்தின் இன்டர்வெல்லி பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கவுள்ளோம். 

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. மொத்தம் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 15 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT