முகப்பு
இந்தியா

போதை பொருள் பரிமாற்றம்: நைஜீரிய நாட்டவர் கைது

போதை பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டபோது அவரிடம் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் இருந்தன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:10 PM
பகிர்:

தானே: நவி மும்பை காவலர்கள், நைஜீரியாவைச் சேர்ந்த போதை பொருள் முகவரை கார்கர் பகுதியில் கைது செய்துள்ளனர்.

அவரிடம் ரூ.5.20 லட்சம் மதிப்புள்ள எம்டி எனச் சொல்லப்படுகிற போதை மாத்திரைகள் இருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு அந்தப் பகுதிக்கு சென்றது. தடை செய்யப்பட்ட பொருளை அங்கு கை மாற்றுவதற்காக மேற்குறிப்பிட்ட நைஜீரிய நபர் செவ்வாய்கிழமை இரவு வந்தபோது காவல்துறை கைது செய்துள்ளது.

போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →