எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  
இந்தியா

பாஜகவினர் உண்மையான ஹிந்துக்கள் அல்லர்: ராகுல் காந்தி

வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள்.

DIN

பாஜகவினர் உண்மையான ஹிந்துக்கள் அல்லர் என்றும் வன்முறை, வெறுப்பு குறித்து மட்டுமே பேசி வருவதாகவும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டதாகவும், இன்னும் பலர் சிறையில் இருப்பதாகவும் பேசினார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

மக்களவைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“அரசியலமைப்பு மீதான தாக்குதலை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் சில தலைவர்கள் சிறையில் உள்ளனர். பிரதமரின் உத்தரவாலும், இந்திய அரசின் உத்தரவாலும் நான் தாக்கப்பட்டேன். அதில் மிகவும் மகிழ்ச்சியான பகுதி அமலாக்கத்துறையால் 55 மணிநேர விசாரணையாகும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். எங்களுக்கு அதிகாரத்தை விட மேலான ஒன்று உள்ளது. அது தான் உண்மை.

மகாத்மா காந்தி குறித்து ஒரு படத்தின் மூலம் தான் அனைவருக்கு தெரியவந்ததாக பிரதமர் கூறுகிறார். அவரின் அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் கவனித்த மற்றொரு விஷயம், தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன.

நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். அவற்றை ஹிந்து மதம் பரப்பாது. நீங்கள் உண்மையான ஹிந்துக்கள் அல்லர்.” எனத் தெரிவித்தார்.

அப்போது அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறிக்கிட்டு, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் தீவிரமான விஷயம் என்று கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மோடி, ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயம் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT