முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம்!

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு.

Updated On : 1 ஜூலை, 2024 at 8:46 AM
ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம்
பகிர்:

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ், திமுக, திரிணமூல், சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீட் முறைகேடு உள்ளிட்டவை குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் முழுவதும் நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இன்று மீண்டும் நீட் உள்ளிட்ட பிரச்னைகளை இரு அவைகளிலும் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →