மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
பிரதமர் நரேந்திர மோடி 2.15 மணிநேரம் பேசினார்.
மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2.15 மணிநேரம் பேசினார்.
இதில், மக்களவைத் தேர்தல் வெற்றி, ராகுல் காந்தியின் பேச்சு, ஹிந்து மதத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
மாலை 4.15 மணிக்கு உரையைத் தொடங்கிய மோடி, மாலை 6.30 மணிக்கு, கிட்டத்தட்ட 2 மணி 15 நிமிடங்களுக்கும் நீடித்தது.
அவரது உரைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்களவையை தேதி குறிப்பிடாமல், அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.