மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மோடி

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரை.

DIN

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நுழைவுத் தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதி அளித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளித்து உரையாற்றினார்.

அப்போது நுழைவுத் தேர்வு முறைகேடுகள் குறித்து அவர் பேசியதாவது,

''நீட் வினாத்தாள் கசிவு குறித்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாளை கசியவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்துகொண்டவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. நுழைவுத் தேர்வு முறைகேடுகள் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்'' என உறுதியளித்தார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்

கடையநல்லூா், சங்கரன்கோவிலுக்கு ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி வருகை!

காவல் அதிகாரி மீது அவதூறு: சிவகிரி காவலா் பணி நீக்கம்

இலவச அன்னதான திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT