மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

பள்ளி மாணவர் போன்ற பேச்சு! ராகுலை மறைமுகமாகத் தாக்கிய மோடி!

நாடாளுமன்றத்தை ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக விமர்சித்தார் பிரதமர் மோடி.

DIN

நாடாளுமன்றத்தை ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 2) உரையாற்றினார்.

அப்போது ராகுல் காந்தியை விமர்சித்து நரேந்திர மோடி பேசியதாவது, ''சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை மக்களைவையில் நேற்று நாம் அனைவரும் பார்த்தோம்.

பள்ளி மாணவர் போல உண்மையைப் பேசாமல் பிறரை குற்றம் சொல்வதைப் போன்று பேசுகிறார்.

பச்சிளம் குழந்தைபோல் ஒருவர் அழுததை நேற்று பார்த்தோம். (ராகுல் பெயரைக் குறிப்பிடவில்லை). ஓபிசி பிரிவினரை அவமதித்த வழக்கில் பிணையில்தான் அவர் வெளியே உள்ளார். வீர சாவர்க்கரை அவமதித்த வழக்கு அவர் மீது உள்ளது.

நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் ராகுல் காந்தி. அக்னிவீரர்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை, உள்ளிட்டவை குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகளைப் பேசி வருகிறார். சிறுபிள்ளைத்தனமான பேச்சானாலும், பொய் பேசுவதை ஏற்க முடியாது.

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் ராகுல். ஹிந்துக்களை அவமதிப்பதை ஒருபோதும் பொருத்துக்கொள்ள முடியாது.

ஹிந்துக்களை வன்முறையாளர்கள் எனப் பேசுவதுதான் உங்கள் (காங்கிரஸின்) கலாசாரமா? ஹிந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த சதி நடக்கிறது.

ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு மூலகாரணமே ஹிந்து மதம்தான். மக்களவையில் ராகுல் காந்தி பேசியதை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறக்கமாட்டார்கள்.

வாக்கு வங்கிக்காக வடக்கு, தெற்கு என நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ். அவசரநிலை காலத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்தன.

பிரிவினைவாத சக்திகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது'' எனக் குறிப்பிட்டார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT