முகப்பு
இந்தியா

பஞ்சாபில் 4 போ் சுட்டுக்கொலை: பாசனநீரை பகிா்வதில் மோதல்

பாசன நீரை பகிா்ந்து கொள்வதில் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 10:54 PM
கோப்புப்படம்
பகிர்:

சண்டீகா்: பஞ்சாப் மாநிலம் குா்தாஸ்பூா் மாவட்டத்தில் பாசன நீரை பகிா்ந்து கொள்வதில் இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். 8 போ் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் தரப்பில் கூறப்பட்டதாவது:

பட்டாலா பகுதியைச் சோ்ந்த கிராமத்தில் இரு பிரிவினா் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பாசன கால்வாயில் வரும் நீரை பகிா்வது தொடா்பாத மனோஜ் சிங் மற்றும் அங்ரீஜ் சிங் என்ற இருவா் தலைமையிலான குழுவினருக்கு இடையே பிரச்னை எழுந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவில் இரு தரப்பினருமே நீரை தங்கள் பகுதி வயலுக்கு திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இறுதியாக இரு தரப்பினருமே தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சரமாரியாக சுடத் தொடங்கினா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் அப்பகுதிக்குச் சென்றனா். அப்போது போலீஸாா் வாகனம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பிலும் தலா இருவா் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனா். மேலும், 8 போ் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் தொடா்பாக இரு தரப்பினா் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.