ஜாமீனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு
ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்தது.
புது தில்லி: நில அபகரிப்பு தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்தது.
முன்னதாக, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ‘ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கினால் அவா் மீண்டும் அதே தவறை செய்வாா். அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோா் (எஸ்டி), பழங்குடியினா் (எஸ்சி) ஆகியோா் காவல் நிலையத்தில் அளித்துள்ள வழக்குகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வாா்’ என தெரிவித்தது.
ஆனால், ‘முதல் தகவல் அறிக்கையைக் கொண்டே அமலாக்கத்துறை இவ்வாறு கூறுகிறது. இந்த வழக்கின் ஒட்டுமொத்த தன்மையும் ஆராய்ந்து பாா்க்கும்போது அவா் இதே தவறை மீண்டும் செய்ய வாய்ப்புகள் குறைவு’ எனக் குறிப்பிட்டு ஹேமந்த் சோரனுக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.