உயிரிழந்த பள்ளி மாணவி 
இந்தியா

14 வயது பள்ளி மாணவி தற்கொலை: தோழியும் தாயும் காரணமா? பள்ளி நிர்வாகம் மறைக்க முயல்வது ஏன்??

பள்ளி மாணவி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவத்தின் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து காவல்துறை விசாரணை

DIN

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் 14 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் ஒரு வாரத்திற்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணின் பெற்றோர் இறுதி சடங்குகளை நடத்தியுள்ளனர்.

அர்ச்சனா தொட்டண்ணவர், ஹவேரியில் உள்ள மொரார்ஜி தேசாய் அரசு உறைவிட பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

அலடகட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கடந்த வாரம் அர்ச்சனா தற்கொலை செய்துள்ளார். இந்த முடிவுக்கு அவரது பள்ளி தோழி ஜோயா மற்றும் அவரது தாயார் இருவரும் அர்ச்சனாவை துன்புறுத்தி வந்ததாகவும் அதனாலே அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. ஜோயாவின் தந்தை அரிஃபுல்லா, அதே பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு பள்ளி நிர்வாகம் அர்ச்சனாவின் குடும்பம், அரிஃபுல்லா உடன் கிராம தலைவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளியே தெரியாதிருக்க பெண்ணின் பெற்றோருக்கு பணமாக ரூ.10 லட்சம் கேட்கப்பட்டு பின்னர் ரூ.1 லட்சத்துக்கு முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த பணத்தில் பங்கு கிடைக்காதவர்கள் செய்தியை பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

அர்ச்சனா படிப்பில் ஆர்வமுள்ள மாணவியாக இருந்ததாகவும் அவரது தற்கொலை கடிதம் கிடைக்க பெற்று அதனை பெற்றோர், பள்ளி நிர்வாகம் மறைக்க முயன்றாகவும் கிராமத்து இளைஞர்கள் அந்த கடிதத்தின் புகைப்படத்தை சேகரித்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை தேவை எனக் கோருவதையும் கிராமத்தார் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வியாழக்கிழமை ஹவேரியில் உள்ள மாணவியின் பள்ளிக்கும் வீட்டுக்கும் காவல்துறையினர் ஆய்வுக்கு சென்றுள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

(தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT