மாதிரி படம் 
இந்தியா

மகளை மணமுடித்து தராததால் பெற்றோரை குத்திக் கொன்ற இளைஞர்!

தெலங்கானாவில் ஒருதலையாக காதலித்த பெண்ணின் பெற்றோரை குத்திக் கொன்ற இளைஞர்

DIN

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மகளை மணம் செய்து கொடுக்காததால் அவரின் பெற்றோரை இளைஞர் குத்தி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னாராவ்பேட் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் தீபிகா என்கிற பெண்ணின் பெற்றோர் போனுடு சிவா(48) மற்றும் போனுடு சுகுணா(42) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துனர்.

மேகலா பன்னி என்கிற நாகராஜு, தீபிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பெண்ணின் பெற்றோர் அவருக்கு மணம் செய்துவைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தபோது காவலர்கள் நாகராஜுவை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தற்போது தீபிகாவுக்கு வரன் பார்ப்பதை அறிந்த நாகராஜு பெண்ணின் வீட்டுக்கு சென்று பெற்றோரை கூரான பொருள் கொண்டு தாக்கியுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்கிருந்து தப்பிக்கும்போது தீபிகாவையும் அவரது சகோதரரையும் தாக்கியதில் அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். இருவரும் வாரங்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தப்பிச் சென்ற நாகராஜுவை குழு அமைத்து தேடும் பணி தொடர்ந்துவருவதாக காவலர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT