பிபவ் குமார் 
இந்தியா

சுவாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாருக்கு ஜாமீன் மறுப்பு!

பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்க எந்த காரணமும் இல்லை...

DIN

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைதான முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது.

ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கடந்த மே 18-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், விசாரணை முடிந்துவிட்டதால் இனி காவலில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறி பிபவ் குமார் ஜாமீன் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்க எந்த காரணமும் இல்லை என்று நீதிபதி அனூப் குமார் மெந்திரட்டா, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடி: அருவிகளில் குளிக்க அனுமதி

பேனா் கிழிப்பு: பாஜகவினா் போராட்டம்

காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்து: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்: பாஜக

செப்.19 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT