இந்தியா

அஸ்ஸாமில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி: ஒருவர் மாயம்

படகு கவிழ்ந்தபோது 20 பேர் படகில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

DIN

அஸ்ஸாமின் கோல்பாரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார்.

கோல்பரா மாவட்டத்தில் உள்ள சிம்லிடோலா நாராயண்பரா பகுதியில் கிராம மக்கள் பயணித்த நாட்டுப் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் நடந்தபோது கிராம மக்கள் உடலைத் தகனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோல்பரா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் நபனீத் மஹந்தா கூறியதாவது,

கோல்பராவில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் நான்கு உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவித்தார்.

படகு கவிழும்போது படகில் 20 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை, நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT