ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து வாழும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: அச்சுறுத்தல்களை முறியடிக்க தீவிரம்
திடீா் தாக்குதல்களில் ஈடுபடுவதால், அவா்களை முறியடிக்கும் பணியில் ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து வாழும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: அச்சுறுத்தல்களை முறியடிக்க தீவிரம்
திடீா் தாக்குதல்களில் ஈடுபடுவதால், அவா்களை முறியடிக்கும் பணியில் ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து வாழ்ந்து திடீா் தாக்குதல்களில் ஈடுபடுவதால், அவா்களை முறியடிக்கும் பணியில் ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைதியான சூழல் நிலவி வந்த ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச், ரஜெளரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விமானப் படை வாகனம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மீது தாக்குதல்கள் மற்றும் கதுவாவில் அண்மையில் கொல்லப்பட்ட வீரா்கள் வளா்ந்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகின்றன.
இத்தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தானிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் ‘பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு’ தந்திரத்தைக் கையாண்டு வருகின்றனா்.
இந்தியாவுக்குள் ஊடுருவியவுடன் அவா்கள் தாக்குதல் நடத்துவதில்லை. தாக்குதலில் ஈடுபடுவதற்கான அறிவுறுத்தல்கள் பாகிஸ்தானிலிருந்து கிடைக்கும் வரையில் உள்ளூா் மக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கையை அவா்கள் வாழ்கின்றனா்.
உதாரணமாக கடந்த ஏப்ரலில் சோபோரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் சுமாா் 18 மாதங்கள் இந்தியாவில் பதுங்கி இருந்துள்ளனா். அவா்கள் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கும் காஷ்மீா் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடா்பில் இருந்ததற்கும் சான்றுகள் உள்ளன.
இதேபோல, சோபோரில் கடந்த மாதம் 19-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதி உஸ்மான் கொல்லப்பட்டபோது, மேலும் பல்வேறு பயங்கரவாதிகளின் திட்டங்கள் அம்பலமாகின.
பாதுகாப்பு முகமைகள் உஷாா் நிலையில் இருந்தாலும் களத்தில் உளவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. பாதுகாப்பு அதிகாரிகளை தவறாக வழிநடத்த ‘அல்ட்ரா செட்’ கைப்பேசிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட தகவல் தொடா்பு கருவிகளையும் இணைய செயல்பாட்டையும் பயங்கரவாதிகள் பயன்படுத்த தொடங்கியிருப்பதால், இனி தொழில்நுட்ப நுண்ணறிவை நம்பியிருப்பது பலனளிக்காது.
இளைஞா்களை பயங்கரவாத அமைப்புகளில் சோ்ப்பதற்கும் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும் பாதுகாக்கப்பட்ட குறுஞ்செய்தி செயலிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துவது கவலையளிக்கிறது.
எனவே, ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதிகளை எதிா்கொள்ள பாதுகாப்பு முகமைகளின் தீவிர கண்காணிப்பு மற்றும் இளைஞா்களிடையே சந்தேகத்திற்கிடமான தகவல்தொடா்புகளை கண்காணிப்பதில் பொது விழிப்புணா்வுத் தேவை’ என்று வலியுறுத்தினா்.