கோப்புப் படம் 
இந்தியா

மும்பை: ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 14 நாள்களில்..

மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட கடந்த 14 நாள்களில் அதிக மழை

DIN

மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட கடந்த 14 நாள்களில் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே பருவமழை தற்போது தெற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி திரும்பியுள்ளதால், தெற்கு மகாராஷ்டிரம், கோவா மற்றும் கேரள மாநிலத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை மதம் முழுக்க மும்பை பெறும் மழை அளவை விட, கடந்த 14 நாள்களில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது.

ஜூலை மாதத்தில் சராசரியாக 855.7 மி.மீ மழை மும்பையில் பதிவாகும். ஆனால் தற்போது வரையே மும்பையில் 862 மி.மீ. மழை பெய்துள்ளது.

மேலும், இம்மாதத்தில் மேலும் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், 1000 மி.மீ. அளவை விடக் கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையின் சாண்டாகுரூஸ் நிலையத்தில் 1,208 மி.மீ மழை பெய்துள்ளது. இதனிடையே மும்பை மாவட்டத்துக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு பேருந்து மோதி பெண் காயம்

வழக்குரைஞா் தாக்கப்பட்ட விவகாரம் : தாமாக முன் வந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

குடியாத்தத்தில் விதைப் பந்துகள் தூவும் பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

நித்தியானந்தா சீடா்கள் மீது நடவடிக்கைக் கோரிய வழக்கு: 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

SCROLL FOR NEXT