முகப்பு
இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தில் பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 10:17 PM
கோப்புப் படம்
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளத்தில் பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், சிறிய நிலச்சரிவுகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்வது மற்றும் ஏராளமான வீடுகள் சேதம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

பத்தனம்திட்டாவில் உள்ள மூழியாா் அணையில் நீா் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பல பகுதிகளின் முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் பல இடங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என்றும் கேரள பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →