குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள தனியார் பள்ளியொன்றில் நேற்று உணவு இடைவேளையின்போது வகுப்பறையின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்த வந்த மாணவர் மீது சுவரின் ஒரு பகுதி விழுந்தது.
இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் உள்ளார். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை காவல் அதிகாரி தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வேகமாக வகுப்பறையை விட்டு வெளியேறினர். மேலும் சைக்கிள் பார்க் செய்யும் இடத்தின் மீது சுவர் விழுந்ததால்,10-12 சைக்கிள்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்ததும் வதோதரா தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, தனியார் பள்ளி 2002-2003 இல் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.