பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா
ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல்.
இந்தியாபாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா
ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல்.
பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கடந்த சில வாரங்களாக கதுவா, தோடா, உதம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது குறித்து ஃபரூக் அப்துல்லா கூறுகையில்,
“இரு நாடுகளிலும் அமைதியை விரும்பாதவர்கள் வெகு சிலரே உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஜம்மு - காஷ்மீரில் எத்தனை படைகள் உள்ளன என்பதை நீங்களே பார்க்கலாம். மலைப் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 7,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இல்லை. பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரைகூட தயாராக மாட்டார்கள். நாங்கள் எவ்வளவு கூறினாலும், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.