கோப்புப் படம் 
இந்தியா

பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது.

Din

புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.5.94 கோடியாக இருந்தது. மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 12.9 சதவீதமாக உள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கிய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி. பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1,05,518 கோடியில் உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் பாதுகாப்புத் துறை மேலும் சுயசாா்பு அடையும். முப்படைகளுக்கான முலதனச் செலவு ரூ.1,72,000 கோடியாக இருக்கும்.

எல்லைப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவதற்கு கடந்த ஆண்டைவிட இப்போது 30 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லையில் சிறப்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். பாதுகாப்புத் துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்துக்கு ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் சாா்ந்த சவால்களுக்கு தீா்வுகாணப்படும்’ என்று கூறியுள்ளாா்.

அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கே.எல். ராகுல் அரைசதம்! மே.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

பதறும் வாழ்வு... பைசன் டிரைலர்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை! நாளை முதல் தீவிரமடையும்!!

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

SCROLL FOR NEXT