நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் சித்தராமையா 
இந்தியா

மத்திய பட்ஜெட் அல்ல; தேசிய ஜனநாயக கூட்டணி பட்ஜெட்: சித்தராமையா

பட்ஜெட் மூலம் நிர்மலா சீதாராமன் அநீதி இழைத்துள்ளதாக சித்தராமையா விமர்சனம்.

DIN

மத்திய பட்ஜெட் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகத்துக்கு அநீதி இழைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளதாவது,

''கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானவர் நிர்மலா சீதராமன். அவர் மாநிலத்துக்கு நீதி வழங்குவார் என்றும், நிலுவையிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கி, உயரும் வட்டி விகிதத்திலிருந்து மாநில மக்களை காப்பார் எனவும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் மக்களுக்கு ஏமாற்றமளித்து, கர்நாடகத்துக்கு அநீதி இழைத்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் கர்நாடகம் பெறப்போவது ஒன்றுமில்லை. ஆந்திரத்துக்கும் பிகாருக்கு மட்டுமே சிறப்புத் திட்டங்களை வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நீடிக்க, அந்த இரு மாநில அரசின் துணை தேவைப்படுவதால், அவற்றிற்கு திட்டங்களை அறிவித்து மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம் அளிக்கக்கூடியது. குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி., மற்றும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் இரு மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டில் 26 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இந்தியா கூட்டாட்சி நாடு. இதில் கர்நாடகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என சித்தராமையா குறிப்பிட்டார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் காப்பதற்காக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது தேசிய ஜனநாயக கூட்டணி பட்ஜெட், இது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்றார் சித்தராமையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்படியிருக்கிறது இந்த சூப்பர்ஹீரோ கதை? லோகா - திரை விமர்சனம்!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வெளியேறிய சாத்விக் - சிராக்!

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

SCROLL FOR NEXT