நிர்மலா சீதாராமன் 
இந்தியா

வருமான வரி நிலையான கழிவு ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு!

புதிய வருமான வரியில் தனி நபர்களுக்கான வருவாயில், ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை.

DIN

வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். அவரது உரையில்,

வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரியில் தனி நபர்களுக்கான வருவாயில் ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை.

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு ரூ.15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டுதோறும் வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது தற்போது ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT