ராகுல் காந்தி  கோப்புப் படம்
இந்தியா

ராகுல் காந்தியுடன் விவசாய சங்க தலைவர்கள் இன்று சந்திப்பு!

7 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு..

DIN

தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிநபர் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தியை அவர்கள் வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர்கள், நாடு முழுவதும் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதிய போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களின் நகல்களை எரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் செப்டம்பர் 1ஆம் தேதியும், ஹரியாணாவில் செப். 15 மற்றும் 22ஆம் தேதிகளில் மெகா பேரணி நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் தொடங்கிய தில்லி நோக்கிய 2-வது பயணம் ஹரியாணா எல்லைகளில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT