அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விபத்து 
இந்தியா

குஜராத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்தச் சம்பம் நடைபெற்றுள்ளது.

DIN

குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஜம் கம்பாலியா நகரில் உள்ள பழமையான 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டனர்.

இதுதொடர்பாக ஆய்வாளர் பிபின் குமார் கூறுகையில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்ததும் என்டிஆர்எப் குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரை மீட்டது.

குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையில், சூரத் நகரில் திங்கள்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும், கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

ஞாயிறு பட்ஜெட்.. முந்தைய நாளில்!

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. மறக்காமல் இதைச் செய்ய வேண்டும்!

காங்கோவில் சுரங்கம் சரிந்து விபத்து: 200 பேர் பலி!

டி20 உலகக் கோப்பையிலிருந்து கம்மின்ஸ் விலகல்..! வேகப் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT