முகப்பு
இந்தியா

பாஜக மூத்த தலைவர் பிரபாத் ஜா காலமானார்

சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலையில் மருத்துவமனையில் காலமானார்

Updated On : 26 ஜூலை, 2024 at 8:07 AM
கோப்புப் படம்
பகிர்:

பாஜக மூத்த தலைவர் பிரபாத் ஜா இன்று காலையில் காலமானார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த பிரபாத் ஜா கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 26) காலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தேசிய துணைத் தலைவராகவும் இருந்த இவர், பாஜகவின் ஒரு முக்கியமான மூத்த தலைவர் ஆவார்.

இவரது மறைவிற்கு மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் தெரிவித்திருப்பதாவது, "பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் மாநிலத் தலைவருமான பிரபாத் ஜா அவர்களின் மறைவு குறித்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா இறைவனடி சேரவும், துயரமடைந்த குடும்பத்திற்கு இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை வழங்கவும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சியில் உங்கள் முக்கிய பங்கு எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது மறைவு அரசியல் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்” என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →