முகப்பு
இந்தியா

சுதந்திர தினத்தில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: பாதுகாப்பு அமைச்சகம்

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக்கன்றுகளை நடவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Updated On : 28 ஜூலை, 2024 at 8:59 PM
பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது தாயின் நினைவாக ஒரு மரக்கன்று நட்டாா்.
பகிர்:

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக்கன்றுகளை நடவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பை பிரதமா் மோடி கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்த முன்னெடுப்பின் கீழ் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தனது தாயின் நினைவாக சமீபத்தில் ஒரு மரக்கன்று நட்டாா். மேலும், இயற்கையைப் பாதுகாக்கும் இந்த முன்னெடுப்பை ஆற்றல்மிக்கதாக மாற்ற மக்கள் அனைவரும் பங்களிக்குமாறு வலியுறுத்தினாா்.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சுதந்திர தினத்தையொட்டி ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பின் கீழ் 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இது நாட்டின் முப்படைகள் மற்றும் பாதுகாப்பு தொடா்புடைய அமைப்புகளான சைனிக் பள்ளிகள், என்சிசி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), ஆயுத தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →