முகப்பு
இந்தியா

தில்லி ஆளுநர் மாளிகை அருகே ஆம் ஆத்மி போராட்டம்!

வாய்க்கால்களைத் தூர்வார உத்தரவு பிறப்பிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்..

Updated On : 29 ஜூலை, 2024 at 5:29 PM
ஆளுநர் மாளிகை அருகே போராட்டம்
பகிர்:

தில்லியில் உள்ள வடிகால்களில் தூர்வாருவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்தியது.

மத்திய தில்லியின் பழைய ராஜிந்தர் நகரில் செயல்பட்டு வந்த தனியால் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூன்று இளம் மாணவர்கள் பலியான சம்பவம் சாட்டையே உலுக்கியது.

அமைச்சர்கள் உத்தரவிட்டும் வாய்க்கால்களைத் தூர்வார உத்தரவு பிறப்பிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் கோரிக்கை விடுக்க வந்தோம் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே தெரிவித்தார்.

Advertisement

அமைச்சர்களின் பேச்சை கேட்காத, திறமையற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைநிலை ஆளுநரிட்ம் கோரிக்கை வைக்க வந்துள்ளோம் என்றார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏவும், எம்சிடி பொறுப்பாளருமான துர்கேஷ் பதக், பாஜக அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியிலிருந்தது. வடிகால் வேலை செய்யாமல் தற்போது அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அது அம்பலமாகியுள்ளது என்றார்.

துணைநிலை ஆளுநர் சக்சேனா இன்று பழைய ராஜீந்தர் நகருக்குச் சென்று மூன்று ஐஏஎஸ் தேர்வாளர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களைச் சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.